அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் - பிரசன்ன ரணதுங்க
13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் “உமக்கொரு வீடு – நாட்டிற்கு நாளை” வீடமைப்பு திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கான இலவச உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இன்று (1)இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைக்கே நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எப்போதும் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், கொழும்பில் இருந்து கல்வி அமைச்சராக கடமையாற்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
மேலும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் காரணமாகவே தாம் மாகாண முதலமைச்சராக செயற்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.