பிரபாகரனின் மக்கள் பாதையை போல அகற்றப்படும் இராணுவ முகாம்கள்: கம்மன்பில கிளப்பும் சர்ச்சை
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பிரபாகரனின் " மக்கள் பாதை" என்ற தொனிப்பொருளில் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் செயற்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது போல் தோன்றுவதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அன்று அதற்கு பின்னால் நின்றவர் பிரபாகரன் இன்று யார் இருக்கிறார் என்று தெரியாது என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.
சுமந்திரனின் கூற்று
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ மக்கள் வாழும் பகுதியில் இராணுவ முகாம்களை அமைப்பது சட்டவிரோதமானது என்கிறார் சுமந்திரன்.அதனாலே இராணுவ அடக்குமுறைகள் நிகழ்கின்றன என்கிறார்.
அவ்வாறு என்றால் இலங்கையில் அதிக மக்கள் வாழும் ஹோமாகம பகுதியிலே பாரிய இராணு முகாம் இருக்கிறது.
அங்குள்ள மக்கள் இராணுவ முகாமுக்கு உள்நுழைய அஞ்சுவர், ஏனென்றால் முகாமுக்குள் நுழைந்தால் சுட்டு விடுவார்கள் என்ற பயம்.அவ்வாறு சிந்திக்கவே மாட்டார்கள்.
பிரிவினை வாத ஆதிக்கம்
அப்படியானால் குறித்த இளைஞர்களை யாராவது தூண்டிவிட்டுள்ளனர்.இது திட்டமிடப்பட்ட செயற்பாடாகவே தோன்றுகிறது.இராணு முகாமுக்குள் இரும்புகள் களவாட செல்வது இலேசான காரியமல்ல.
அவர்கள் பாராவது ஒருவரின் தூண்டுதலுக்கு பலிகாடாவாகியிருக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பிரபாகரன் யுத்தம் செய்து கூட ஒரு முகாமையாவது அகற்ற முடியாத நிலையில்.பிரிவினை வாத ஆதிக்கத்தின் ஒரு செயற்பாடகவே நான் இதனை பார்க்கிறேன்.
ஹர்த்தாலுக்கு பின்னால் இருக்கும் சக்தியை அரசாங்கம் கண்டுபிடித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
