கண்டியில் நடைபெறும் நிகழ்வு : கட்டுநாயக்காவில் தரையிறங்கிய தென்னிந்திய பிரபல நடிகர்
"நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற "Song of Resillience" என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மூத்த கொலிவுட் கலைஞர் பிரகாஷ் ராஜ்(prakash raj) இன்று (09/07) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் குறித்து விவாதிக்கும் "நியேலினி" உலகளாவிய மாநாடு, உலகின் 102 நாடுகளைச் சேர்ந்த 500 விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் 09/08 முதல் 09/09 வரை கண்டியில் உள்ள போல்கொல்லா கூட்டுறவு கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.
இசைநிகழ்ச்சியில் பங்கேற்க வருகை
இதன்படி அந்த நிகழ்வில் நடைபெறவுள்ள இசைநிகழ்ச்சியில் பங்கேற்க பிரகாஷ் ராஜ் இன்று மதியம் 12.55 மணிக்கு இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1167 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை வரவேற்க பத்திரிகையாளர் தரிது உடுவரகெதர, திரைப்பட இயக்குனர் சமிந்த ஜெயசூரிய மற்றும் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
