டுபாய் வல்லாட்டத் தொடரில் சாதனை படைத்த தமிழர்கள்
Tamils
Chess
Dubai
trichy
By Sathangani
டுபாயில் (Dubai) நடைபெற்ற சதுரங்கத் தொடரில் (Dubai Police Masters 2024) பல்வேறு நாடுகளிலிருந்து பல புகழ் பெற்ற வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
நேற்று (12) நிறைவடைந்த இந்த தொடரின் முதல் மூன்று இடங்களையும் தமிழர்களே பெற்றிருந்தனர்.
முதலாவது இடத்தினை திருச்சியில் பிறந்து வளர்ந்து இப்போது பெங்களூரில் வாழும் பிரணவ் (Pranav.V) பிடித்திருந்த நிலையில் தங்கப்பதங்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
மிகப்பெரிய சாதனை
இரண்டாம் இடத்தினை அரவிந்த் சிதம்பரம் (Arvind Chitambaram) பிடித்திருந்த நிலையில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
மூன்றாம் இடத்தினைப் பிடித்த பிரணேஸ் (Pranesh) வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.
இதேவேளை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற ஒரு தொடரில் முதல் மூன்று இடங்களையும் தமிழர்களே பிடித்திருப்பது என்பது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்