ஓய்வை அறிவித்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து (England) அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அத்தோடு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் - 800 (Muttiah Muralitharan), சேன் வார்ன் - 708 (Shane Warne ) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இவர் உள்ளார்.
கடைசி போட்டி
இந்த நிலையில், ஓய்வு முடிவு குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் மேலும் தெரிவிக்கையில், “இந்த கோடைக்காலத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் (Lord's Cricket Ground) விளையாடும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது என்பதை நினைத்து வருத்தம் அடைந்தாலும் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன்.
என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜிம்பாப்வே (Zimbabwe) அணிக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |