“ரணில்தான் மனிதன்” பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு
“ரணில்தான் மனிதன்” என்ற நல்ல செய்தியை முழு நாடும் ஏற்றுக்கொண்டுள்ளது என்று ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
சவால்களை ஏற்றுக்கொள்ளும் திறமையினால் மொட்டுக் கட்சி ரணிலுக்கு (Ranil Wickremesinghe) உதவியதாக தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, மொட்டுக் கட்சி எடுத்த தீர்மானத்தை நாட்டின் பெரும்பான்மையான மக்களும் அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நற்செய்தி” எனும் தொனிப்பொருளில் பம்பலப்பிட்டி (Bambalapitiya) லொரிஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara), பொதுஜன பெரமுனவின் கண்டி (Kandy) மாவட்ட உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage ) ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பின் பல்வேறு பகுதிகளில் “இதோ ஓர் நற்செய்தி” எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று (25) இரவு முதல் அவற்றுக்கு மேலாக “நற்செய்தி, மொட்டுக்கட்சியிலிருந்து வேட்பாளர்” எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நாட்டு மக்களுக்கான உரையை முன்னிட்டு இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான குறித்த சுவரொட்டிகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |