ரணிலுக்கே ஆதரவு : மகிந்தவிற்கு பறந்த அமைச்சரின் கடிதம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்கப்போவதாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranatunga) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவுக்கு(mahinda rajapaksa) பிரசன்ன ரணதுங்க எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,
பெரமுன வேட்பாளருக்கு ஆதரவில்லை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. மாறாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்ட போது அதனை மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்கவே எனவும் எனவே ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு அவருக்கே எனவும் ஆரம்பம் முதல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
