பதில் யாழ். மாவட்டச் செயலாளராக பிரதீபன் பொறுப்பேற்பு
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் பதவி விலகி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச்செல்கிறார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு புதிய மாவட்டச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் மாவட்டச் செயலாளராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார்.
மகேசனின் பிரிவுபசார விழா
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச்செல்லும் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவுபசார விழா நேற்று வெள்ளிக்கிழமை(30) இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்களால் கணபதிப்பிள்ளை மகேசன் கௌரவிக்கப்பட்டார்.