வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் : நேர்முகத் தேர்விற்கு எதிர்ப்பு!

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples SL Protest Eastern Province
By Raghav Jun 12, 2024 04:20 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - வாகரையில் (Vakarai) இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பாக பயனாளிகளைத் தெரிவு செய்யும் நேர்முகப் தேர்வினை நிறுத்துமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாகரை பிரதேச கடற்றொழில் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், ஆலய அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் (12) மேற்கொண்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்று காலை 9 மணியளவில் உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் குறித்த நேர்முகத் தேர்வு நடைபெற்ற நிலையில், அவ்விடத்திற்கு சென்ற எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு பொருத்தமற்ற, மக்கள் விரும்பாத குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர்.

மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித்

மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித்

நேர்முகத் தேர்வு

அத்துடன், உதவி மாவட்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரியான அரச அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.

வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் : நேர்முகத் தேர்விற்கு எதிர்ப்பு! | Prawn Farming Project In Vagarai

மாவட்ட அரச அதிபர் இதனை நிறுத்தாமல் நேர்முகப் தேர்வினை நடாத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பயணாளிகள் தெரிவு தொடர்பான நேர்முகத் தேர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் குதித்த அரச ஊழியர் சங்கம்

நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் குதித்த அரச ஊழியர் சங்கம்

கவனயீர்ப்பு போராட்டம்

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அரச அதிபருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி இன்று குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டப்பட்டதாக உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.

வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் : நேர்முகத் தேர்விற்கு எதிர்ப்பு! | Prawn Farming Project In Vagarai

இந்த நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ளாத போராட்டக்காரர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன் வைத்து கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

அபிவிருத்தி என்ற போர்வையில் வளங்களை அழிக்காதே, வாகரை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே. ஆளுநரே மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளி, அழிவுகரமான இறால் வளர்ப்பை நிறுத்து. சூழலை அழிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் எங்களுக்கு வேண்டாம். என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 

அநுராதபுரம் பாடசாலையில் உணவு ஒவ்வாமை: மாணவர்கள் பலர் பாதிப்பு

அநுராதபுரம் பாடசாலையில் உணவு ஒவ்வாமை: மாணவர்கள் பலர் பாதிப்பு

கொட்டாவை -மகும்புர பேருந்து நிலையத்தில் கோர விபத்து : ஐவர் படுகாயம்

கொட்டாவை -மகும்புர பேருந்து நிலையத்தில் கோர விபத்து : ஐவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி