செப்டம்பர் மாதத்தில் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு
ஆண்டு தோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா (Baba vanga) முன்னரே கணித்துள்ளார்.
பாபா வங்காவின் பல கணிப்புகள் நிறைவேறியதால் வரலாற்றில் அவர் அழியாப் புகழ் பெற்றார்.
2025 ஆம் ஆண்டில் உலகம் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பாபா வாங்கா கணித்திருந்தார்.
பெரிய பொருளாதார நெருக்கடி
அந்தவகையில், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சில சம்பவங்கள் நடைபெறும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
அதுவும் குறிப்பாக இந்த மாதம் மழை, வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் இந்த ஆறுகளால் பல ஊர்கள் அழியும் என்று எச்சரித்திருந்தார்.
அதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒவ்வொரு சம்பவமாக நிகழ்ந்து வருகிறது. கடந்த 31 ஆம் திகதி மேற்கு சூடானின் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாபா வாங்கா எரிமலை வெடிப்புகள் குறித்தும் எச்சரித்துள்ளார். இதில், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை குறித்து ஒரு சிறப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
பாபா வாங்காவின் கணிப்பின்படி, உலகம் வரும் காலத்தில் ஒரு கடினமான ஆண்டை எதிர்கொள்ளும், அது பொருளாதார சரிவாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடும் என்று அவர் கூறியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
