கர்ப்பிணி நாயால் இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்
கர்ப்பிணி நாயால் பெரும் கோடீஸ்வரர்
தனது கர்ப்பிணி நாயால் தான் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவை சேர்ந்த லியோனர்ட் லிண்டன் (42). என்பவரே இவ்வாறு திடீர் பணக்காரர் ஆன இளைஞர் ஆவார்.
இந்த இளைஞன் லிவி என்ற பெண் நாயை வளர்த்து வந்தார். லிவி கர்ப்பமாக இருந்த நிலையில் அதற்கு உடல்நிலை சரியில்லை என லிண்டனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து உடனடியாக லிவியை காண வேண்டும் என எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் வீட்டிற்கு அவசர அவசரமாக பதற்றத்துடன் லிண்டன் கிளம்பினார்.
அதிஷ்ட இலாப சீட்டு
அப்போது திடீரென Stop & Shop கடையில் வண்டியை நிறுத்திய லிண்டன் அங்கு சில பொருட்களை வாங்கியதோடு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பையும் வாங்கினார். அந்த சீட்டுக்கு தான் $2 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ. 72,26,64,400) பரிசு விழுந்துள்ளது.
தனக்கு பரிசு விழுந்ததற்கு தனது நாய் லிவி தான் முழு காரணம் என லிண்டன் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை, இது என் வாழ்க்கையை மாற்றும். பரிசு பணத்தில் முதலில் லிவிக்கு புதிய கொட்டில் வாங்குவேன் என கூறியுள்ளார்.

