யாழில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு

Jaffna Sri Lanka Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Raghav Sep 18, 2024 05:52 PM GMT
Report

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வொன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.

குறித்த செயலமர்வானது, இன்றைய தினம்(18) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனின் (Marudlingam Pradeepan) தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த செயலமர்வில் கருத்துத் தெரிவித்த அலுவலர், “எதிர்வரும 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 41 நிலையங்களானது 511 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகளையும் வாக்குச்சீட்டுகளையும் அதற்குரிய இதர ஆவணங்களையும் விநியோகிக்கும் மற்றும் கையேற்கும் நிலையமாக செயற்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு: வினோ நோகராதலிங்கம்

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு: வினோ நோகராதலிங்கம்

வாக்குச் சீட்டு

அத்துடன், அந்த நிலையங்களுக்கு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாகவும் மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்ட அலுவலகர்களின் பங்களிப்பானது காத்திரமானது.

யாழில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு | Preliminary Meeting On Jaffna Elections

மேலும், எதிர்வரும் 20ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு உரிய வகையில் வாக்குப் பெட்டிகளையும் வாக்குச் சீட்டுக்களையும் இதர ஆவணங்கள் கையளிக்கப்படும்.

 இதேவேளை, 21ஆம் திகதி வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவர்களால் கையளிக்கப்படவுள்ள வாக்குப் பெட்டிகளையும் இதர ஆவணங்களையும் உரிய வகையில் பெற்றுக்கொள்வதில் மிக வினைத்திறனாக செயற்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் 2010 இல் களமிறக்கப்பட்டிருக்க வேண்டியவர்: விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டு

தமிழ் பொது வேட்பாளர் 2010 இல் களமிறக்கப்பட்டிருக்க வேண்டியவர்: விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டு

தேர்தல்கள் ஆணையாளர்

இந்நிலையில், இந்த தேர்தல் சிறப்பாக அமைய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு | Preliminary Meeting On Jaffna Elections

அத்துடன், இந்த செயலமர்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல் ராஜினால்வாக்குப் பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமைகளில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பு

தமிழ் பொது வேட்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பு

பிரதமர் மோடியை சந்திப்பேன்...! டொனால்ட் டிரம்ப் திடீர் அறிவிப்பு

பிரதமர் மோடியை சந்திப்பேன்...! டொனால்ட் டிரம்ப் திடீர் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023