நான்கு வயது பிள்ளைக்கு முன்பள்ளிக் கல்வி: கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
Ministry of Education
A D Susil Premajayantha
Education
By Shalini Balachandran
நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளிக் கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
முன்பள்ளிக் கல்வி
கொழும்பு டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இடவசதி உள்ள மற்றும் மூடப்பட்டிருக்கும் அனைத்து பாடசாலைகளிலும் முன்பள்ளிச் சிறுவர்களுக்கு வகுப்பறைகள் ஒதுக்கப்படும் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி