சனிப் பெயர்ச்சி!! ஆட்டிப்படைக்கப் போகும் 'சடே - சதி பலன்கள்': தவிக்கப்போகும் 5 ராசிகள்
ஜோதிட சாஸ்திரங்கள் படி, சனி பகவான் நீதியின் அதிபதியாக கருதப்படுகிறார்.
சனிபகவான் தனிப்பட்ட நபர்களுக்கு அவர்களின் செயல்களுக்கு தகுந்த பலன்களை வழங்குவதாகவும். அவர்கள் கடின உழைப்புக்கு இறைவனின் ஆசிர்வாதத்தை பெறுவதாகவும் கூறப்படுகிறது.
சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். சனி மெதுவாக நகர்வதால், அவரின் தாக்கம் நீண்ட நாட்களாக இருக்கும்.
அப்போது சனியின் பார்வையில் இருந்து சில ராசிகள் தையா மற்றும் சதே சதியின் பலன்களை பெறுவார்கள்.
சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகும் ராசிக்காரர்கள்
அந்த வகையில் ஜோதிடங்களின் அடிப்படையின் படி, சனி சதே சதி மற்றும் தையா ஒரு ராசி அடையாளத்தின் வாழ்நாளில் ஒருமுறை வரும். அந்த நேரத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகி தாக்கத்தை அனுபவிப்பார்கள்.
கும்பத்தில் சனி பகவான் பிரவேசித்து வருவதால், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரகள் மீது சனி பகவானின் சடே சதி பார்வை விழுகிறது. இதனால் மகர ராசிக்காரர்கள் பணியிடத்தில் மன உளைச்சலை சந்திப்பார்கள்.
கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளையும், விபத்துக்களையும் சந்திக்க நேரிடும்.
சனியின் உதயத்தால் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் தான் தையா பலனை பெறவுள்ளார்கள்.
முன்பை விட தையாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வேலையிலும், வியாபாரத்திலும் அதிக சுமை அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகுவீர்கள். வாழ்க்கை துணையுடன் அடிக்கடி சண்டைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்
சனிக்கிழமை சனி பகவானை நேரில் சென்று தரிசிக்க வேண்டும்.
அந்த நாட்களில் கருப்பு எள், நல்லெண்ணெய், கருப்பு போர்வை, கருப்பு உளுந்தம் பருப்பு, செருப்பு ஆகியவற்றை தானமாக வழங்கவும்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள்.
மேலும், சனி பகவான் கோயிலில் கடுகு எண்ணெய் தீபம் அல்லது எள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இந்த தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |