ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு வெளியிட்ட முன்பள்ளி மாணவர்கள் கைது(படம்)
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்புக்கு எதிராக அந்நாட்டு முன்பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் உள்ள ஆரம்பப் பள்ளிமாணவர்கள், உக்ரைனிய தூதரகத்தில் பூக்களை வைத்ததற்காகவும், " போர் வேண்டாம்" என்று பதாதைகள் வைத்திருந்ததற்காகவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நோபல் பரிசு பெற்ற நோவயா கெஸெட்டா நாளிதழ் உறுதி செய்துள்ளது. மேலும் தற்போது அந்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்ளின், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு சம்பந்தமாக விமர்சனம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
В ОВД Пресненское детей и их родителей оставляют на ночь. Полиция задержала их, когда они возлагали цветы у посольства Украины
— Новая Газета (@novaya_gazeta) March 1, 2022
Фото: фейсбук pic.twitter.com/Wq3trWsjPN