ஆரவாரமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி - பிரதமர்
இலங்கை வரலாற்றில் மங்கள வாத்தியங்கள் மற்றும் இராணுவ அணிவகுப்புடனேயே ஜனாதிபதிகள் இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை சர்வதேசம் உள்ளிட்ட அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.
இந்தநிலையில், படைகள சேவிதர், பிரதி படைகள சேவிதர் மற்றும் உதவி படைகள சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயக்கர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அழைத்து வரப்பட்டார்.
கொள்கை பிரகடனம்
இதனை தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி நிகழ்த்தும் குறித்த உரையை நாடாளாவிய ரீதியில் மக்கள் அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.
ஆடம்பர வரவேற்புகள்
அத்தோடு, பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எவ்வித ஆடம்பர வரவேற்புகளுமின்றி அவைக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.
சபாநாயகர் அசோக ரங்வல்ல மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரால் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) வரவேற்கப்பட்டுள்ளார்.
எவ்வித வாகன பவணியும் இன்றி, மரியாதை அணிவகுப்புக்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில் பிரதமர் அவைக்குள் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |