தன்னை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ரணில் அறிவிக்கவில்லை: விஜயதாச ராஜபக்ச
அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தெரிவித்துள்ளது.
கட்சியின் அரசியல் குழுவில் விஜயதாச ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லகே பியதாச தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை நிராகரித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்ச
அத்துடன், தன்னை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ரணில் அறிவிக்கவில்லை எனறும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
விஜேதாச ராஜபக்ச நீதித்துறை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்து வருவதுடன், அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் அந்த பதவியில் பணியாற்ற தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |