ஜனாதிபதி மன்னிப்பு கேட்டாலே பிரித் நீரை அருந்துவோம் : கசப்பதேரரின் இறுமாப்பு
Anura Kumara Dissanayaka
Galagoda Aththe Gnanasara Thero
Protest
By Jaso
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தன்னிடம் வந்து, தன்னை வணங்கி, மகாசங்கத்தின் சக்தியை ஏற்றுக்கொண்டு, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினால் மட்டுமே, தாம் பிரித் நீரை அருந்தி, தம் கைகளில் பிரித் பூணூல் கட்டுவதாக பாலங்கொட கசப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
தேரர் ஊடகங்களிடம் பேசுகையில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
தவறு செய்து விட்டேன் என ஜனாதிபதி மன்னிப்பு கேட்கவேண்டும்
ஜனாதிபதி வந்து, “ஓ வணக்கத்திற்குரியவரே, எங்களை மன்னியுங்கள், மகாசங்கம் இவ்வளவு சக்தி வாய்ந்தது என்று நாங்கள் நினைக்கவில்லை.

நான் தவறு செய்துவிட்டேன், ஞானசாரரை விடுவிக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினால் மட்டுமே, தாம் பிரித் நீரை அருந்தி, தம் கைகளில் பிரித் பூணூல் கட்டத் தயாராக இருப்பதாக தேரர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி