முன்னாள் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பாரிய அளவு பணம்: அநுரவின் அறிவிப்பு
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் இன்று (17) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள்
கடந்த அரசாங்கங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் மாதாந்தம் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை 50 வீதம் மேற்கொண்டுள்ளனர்.
பாதாள உலகக் குழு
கடந்த கால அரசியல்வாதிகளுக்கு பாரிய அளவிலான பணத்தை வழங்கியுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான திட்டங்களை இலங்கை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.
தவறான வழி
இந்த திட்டங்களை மேற்கொள்வதில் உள்ள சவால்களையும் இலங்கை காவல்துறை பொறுப்பேற்றுள்ளது.
ஆகவே, வெகு விரைவில் நாட்டிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களின் நிதி ஒருபோதும் தவறான வழியில் பயன்படுத்தப்படாது எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
