ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டுப் பயணம் : வெளியான அறிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமாக ஜேர்மனிக்கு (Germany) பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (23) நடைபெற்ற நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தின் போது அநுரகுமார திசாநாயக்க ஜேர்மன் ஜனாதிபதியைச் சந்திப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இலங்கைக்கு வருகை தரும் ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கும், பின்னர் சீனாவிற்கும், பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் விஜயம் செய்தார்.
இந்தநிலையில் ஜேர்மனிக்கான பயணம் ஜனாதிபதியின் முதல் ஐரோப்பிய பயணமாக திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
