வெளிநாடுகளுக்கு அரை பயணச்சீட்டில் சென்றாரா அநுர! பிரதமரால் உருவெடுத்த சர்ச்சை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிநாட்டு பயணங்களின் போது, அரை பயணச்சீட்டை பெற்றா பயணம் செய்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) கேள்வி எழுப்பியியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சிறப்பு வெளிப்படுத்தல் நேற்று நாடாளுமன்றில் வெளியிட்டார்.
செலவுத் தொகை
அதன்போது, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினதும், வெளிநாட்டு பயண தொடர்பான செலவுத் தொகை பிரதமாரால் வெளியிடப்பட்டிருந்து.
இதன்படி, ஜனாதிபதி அநுர, இதுவரை சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன், அவரின் செலவு 1.8 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டது.
விமர்சனங்கள்
இவ்வாறானதொரு பின்னணியில், வெளியிடப்பட்ட இந்த தொகையில், 03 நாடுகளுக்கு எப்படி செல்ல முடியும் என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறன.
இந்த நிலையில், பதினொரு பேர் எப்படி அப்படிப் போக முடியும் என்றும் வெளிநாடுகளுக்கு இவ்வளவு மலிவாக செல்ல என்றால், முழு எதிர்க்கட்சியும் ஒன்று கூடி அந்த மூன்று நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விமர்சித்துள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
