ஜனாதிபதி அநுரவின் யாழ் விஜயம் : கலந்துகொள்ளவுள்ள நிகழ்வுகள்
தைப்பொங்கல் தினமான நாளை (15) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழிற்கு வருகை தரும் ஜனாதிபதி, நாளை மதியம் 2.00 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4.00 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார்.
காசோலை வழங்கும் நிகழ்வு
அதனையடுத்து நாளை மறுதினம் (16) காலை 9.00 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார்.

பின்னர் மதியம் 2.00 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |