யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித்
ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் நிமித்தம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வட மாகாணத்துக்கு (Northern Province) விஐயம் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில், இன்று (31) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் செய்துள்ள அவர் அங்குள்ள பல்வேறு சமய ஸ்தலங்களுக்கு விஜயம் செய்ததுடன் சந்திப்புக்களிலும் ஈடுபட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக ஆசி பெறும் பொருட்டு இந்த விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத வழிபாடுகள்
அதன்படி, இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
பின்னர் யாழ் நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுக் கொண்டார்.
இந்த விஜயத்தில் சஜித் பிரேமதாச அணியின் முக்கிய பெண் பிரமுகரான உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |