16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்காக ரணில் இரங்கல்
Ranil Wickremesinghe
Pope Benedict XVI
By Vanan
முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதம் அடைந்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (04) கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.
இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த அதிபர், அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.
திருத்தந்தைக்காக அஞ்சலி

அதிபர் ரணில் விக்ரமசிங்க, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்த பாப்பரசரின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.
