பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம்
Ranil Wickremesinghe
Shehan Semasinghe
United Kingdom
Ministry of Finance Sri Lanka
By Vanan
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அதிபரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய இராச்சியத்திற்கு ( பிரித்தானியா) சென்றதை அடுத்து அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா
அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் வரை இலங்கையின் பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க செயற்படுவார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் நேற்று உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிபர் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
