அணு ஆயுத உற்பத்தியை தீவிரப்படுத்தும் வட கொரியா - அதிபர் கிம் ஜொங் உன் அதிரடி உத்தரவு!
உலக நாடுகளை அச்சுறுத்த வட கொரியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இருப்பினும், அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை உருவாக்கி அவற்றை சோதனை செய்யும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
இந்தநிலையில், அணு ஆயுதங்களின் உற்பத்தியை மேலும் தீவிரப்படுத்துமாறு வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிபரின் அதிரடி உத்தரவு
அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை எதிர்கொள்ள காத்திருக்கும் வட கொரியா அந்நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்குமாறு வட கொரியா அதிபர் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் குறுகிய தூர ஏவுகணையை சோதனை ஒன்றும் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.
மேலும் வட கொரியா தனது முதலாவது இராணுவ உளவு செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அதிபர் கிம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
