'2024' பட்ஜெட் இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ரணில்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் நாளை (13) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அதிபர் இன்று (12) கலந்துகொண்டார்.
பங்கேற்றோர்
நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, அதிபரின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,அதிபர் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, அதிபரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திசானாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)