ரணில் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை -சுருதியை மாற்றும் இராஜாங்க அமைச்சர்
ரணில் மீது குற்றமில்லை
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, பதவியேற்பதற்கு முன்னரோ அல்லது பதவியேற்ற பின்னரோ பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட எந்தவொரு நிறுவனமோ அல்லது நீதிமன்றமோ ரணில் விக்ரமசிங்கவை குற்றஞ்சாட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி
மத்திய வங்கி பிணைமுறி மோசடியை யார் செய்திருந்தாலும் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை ரணில் அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் அர்ஜூன் மகேந்திரனுடன் இணைந்து பிணைமுறி மோசடியில் ரணில் ஈடுபட்டார் என பொதுஜன பெரமுனவினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
