2025 அதிபர் தேர்தலிலும் ரணிலை ஆதரிக்க மகிந்த தரப்பு நடவடிக்கை..!
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த அதிபர் தேர்தலுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக பரிந்துரைக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு இடையில் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உட்கட்சி தகவல்களின்படி, இந்த விடயம் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இன்றுவரை அது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே நாடாளுமன்றத்தினால் அதிபர் தெரிவு செய்யப்பட்ட போது, தற்போதைய அதிபருக்கே, பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை, 2025 அதிபர் தேர்தலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஆதரிக்கும் யோசனையை, கட்சியின் தலைவர், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் உறுப்பினர்கள் சிலர் கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்