நாடு திரும்பினார் அதிபர் ரணில் விக்ரமசிங்க
SriLankan Airlines
Bandaranaike International Airport
Ranil Wickremesinghe
India
By Kathirpriya
இரண்டு நாட்கள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (21) இரவு நாடு திரும்பினார்.
நேற்று (21) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA வந்தடைந்ததாக விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் அதிபர் உட்பட அதிபருடன் இந்தியாவின் புதுடில்லிக்கு சென்ற 17 பேர் கொண்ட தூதுக்குழுவை அவர் வரவேற்றார் என்று கூறினார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தூதுக்குழுவினர் உள்ளிட்டோர் நேற்று (21) இரவு11.25 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நேற்று இந்தியாவின் புது டெல்லியில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL196 இல் இவர்கள் வந்திறங்கியதாக அவர் தெரிவித்தார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி