அதிபர் ரணிலின் அதிரடி உத்தரவு - முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
அடுத்த வருடம் அரச நிர்வாக சேவையின் செயல்திறனை பேணுவதற்கான அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய அதிபரின் செயலாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக அதிபரின் செயலாளர் அடுத்த வருடத்திற்கான இலக்கை வழங்குவார் மற்றும் இலக்கு பின்பற்றப்படுகிறதா என ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை முன்னேற்றம் சரிபார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலாளர்களை நீக்குவதற்கும் தீர்மானம்
முன்னேற்றங்களைச் சரிபார்க்கும் போது, 06 மாதங்களில் தமது இலக்குகளை பூர்த்தி செய்யாத அமைச்சுச் செயலாளர்களை நீக்குவதற்கும் அதிபரின் செயலாளர் தீர்மானித்துள்ளார்.
அடுத்த வருடம் 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள அமைச்சு செயலாளர்களில் கணிசமானவர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சு செயலாளர்களும் உடன்படிக்கையில் உள்வாங்கப்படவுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
