லொத்தர் சீட்டை வாங்கிய அதிபர் ரணில்
தேசிய லொத்தர் சபையின் கீழ் சீட்டிழுக்கப்படும் மஹஜன சம்பதவின் 5000ஆவது சீட்டிழுப்பை முன்னிட்டு இன்று (24) அதிபர் ரணில் விக்ரமசிங்க மஹஜன சம்பத டிக்கட் ஒன்றினை கொள்வனவு செய்தார்.
இந்நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. அதிபருக்கு குறித்த லொத்தர் சீட்டை தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் அதிபர் சட்டத்தரணி ரொனால்ட் டி பெரேரா வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்,அதிபர் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் , அதிபரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் அஷு மாரசிங்க, தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் சட்டத்தரணி ஹஷினி ஜயசேகர, சபை உறுப்பினர்களான டி.டி. ஜயசிறி, சட்டத்தரணி அசங்க ரந்தெனிய, உதவிப் பொது முகாமையாளர் (விற்பனை) மெனுர சதுரங்க, உதவிப் பொது முகாமையாளர் (கொள்முதல்) சுனேத் ஜயவர்தன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


