இலங்கைக்கு உதவிசெய்யுமாறு பரிஸ் உச்சிமாநாட்டில் ரணில் அழைப்பு
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் தலைநகர் பரிசில் இன்று நடத்தப்பட்ட புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உச்சி மாநாட்டில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரனின் அழைப்பில் உரையாற்றிய போது இலங்கை போன்ற நாடுகளுக்குரிய நிதியுதவி தொடர்ந்தும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இன்றைய மாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க நிதியமைச்சர் ஜெனட் யெலன், அனைத்துலக நாணய நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா ஆகியோர் பங்குபற்றிய நிலையில் ரணில் தனது உரையில் இலங்கை போன்ற நாடுகளுக்குரிய நிதியுதவி தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.
முன்னதாக பரிஸ் கிளப் எனப்படும் இலங்கைக்கு உதவி வழங்கும் மேற்குலக நாடுகளின் நிதி அமைப்பின் உறுப்பினர்களுடனும் சந்திப்புக்களை நடத்திய ரணில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதித்துள்ளார்.
