நாட்டு மக்களுக்கான ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்து!

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples
By Dhilak Jan 01, 2025 01:05 AM GMT
Report

தேசிய மறுமலர்ச்சிக்காக பங்காற்றும் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

“நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது.

2025 வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பு: வேகமெடுக்கும் அநுர அரசு

2025 வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பு: வேகமெடுக்கும் அநுர அரசு

அரசியல் கலாசார மாற்றம்

அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம்.

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்து! | President S New Year S Message

கிராமிய வறுமையை ஒழித்தல், 'கிளீன் சிறிலங்கா' திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் "கீளீன் சிறிலங்கா" வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த பரிமாற்றரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் நாம் 2024 ஆம் ஆண்டில் நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருக்கிறோம்.

கனவை நனவாக்கும் வாய்ப்பு 

அனைவருக்கும் "வளமான நாடு - அழகான வாழ்வை" பெற்றுக் கொடுப்பதற்காக புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி, புதிய உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு சகோதரத்துவத்துடன் முன்னோக்கி வருவதற்கு 2025 புதுவருட உதயத்துடன் சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்து! | President S New Year S Message

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது.

விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு 

அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்து! | President S New Year S Message

தேசிய மறுமலர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பங்காற்றும் உங்கள் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ”

ஓய்வு தினமன்று அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா கூறிய தகவல்

ஓய்வு தினமன்று அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா கூறிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026