உடன் பதவி விலகுங்கள் -கோட்டாபயவிற்கு ஆளும் தரப்பு எம்.பி அறிவிப்பு
Dilan Perera
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
கோட்டாபய தோல்வி
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை நோக்கும் போது அரசாங்கம் என்ற ரீதியில் அரச தலைவர் கோட்டாபய தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னேற்றத்தை காட்டாத ரணில்
ரணில் விக்கிரமசிங்க கடந்த ஐந்தாண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்ததாகவும், நாடு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்றும், அது சட்டியில் இருந்து விழுந்தது போல் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உடன் பதவி விலகவேண்டும்
எனவே கோட்டாபய ராஜபக்ச உடனடியாக அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்து நாடாளுமன்றத்தின் ஊடாக பதில் அரச தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பதில் அரச தலைவர் மூலம் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி