இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே.ஸ்ரீ. ரங்கா தெரிவாகியுள்ளார்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ. ரங்கா தெரிவாகியுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சில் இடம்பெற்ற குறித்த பதவிக்கான தேர்தலில் அவர் 27 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜகத் ரோஹன குமார 24 வாக்குகளைப் பெற்று தோலிவியடைந்துள்ளார். அதே நேரம், கால்பந்து சம்மேளனத்தின் புதிய செயலாளராக இந்திக்க தேனுவர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
40 வேட்பாளர்கள்
இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 20ஆம் திகதி ஜனவரி 2022 அன்று நிறைவடைந்திருந்தது. இதில் மொத்தம் 10 பதவிகளுக்கு 40 வேட்பாளர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.
புதிய நிர்வாகிகள் ஐந்து மாத காலத்திற்கு பதவியில் இருப்பதுடன் இவ்வாண்டு மே 31 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Former Member of Parliament J. Sri Ranga is elected as the chairman of the Sri Lanka Football Federation, with 27 votes; Jagat Rohana obtained 24 votes; Former chairman Jaswar Umar disqualified from contesting#SriLanka #LKA #SL pic.twitter.com/67osfdCW8F
— Rizwan Segu Mohideen (@RizwanStWEET) January 14, 2023
இதேவேளை முன்னாள் தலைவர் யூ.எல். ஜஸ்வர் புதிய தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 13 மணி நேரம் முன்
