யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி மகசின்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) வளாகத்தில் இரண்டு மகசின்களும் (துப்பாக்கிக்கு குண்டுகள் போடப்படும் பாகம்) வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் மேற்புறத்தில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் (30) குறித்த பகுதியை சுத்தம் செய்தவேளை குறித்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறை பாதுகாப்பு
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்றிரவு முதல் அங்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று காலை குறித்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் அந்த மகசின்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்று கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் - பு.கஜிந்தன், த.பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        