ஐஎம்எப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (01) காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதி
அத்தோடு, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) நேற்று (31) மாலை சந்தித்துள்ளனர்.

இதனடிப்படையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் தவணை தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் (Kabir Hashim) மற்றும் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |