நாளை பதவி விலகுகிறார் கோட்டாபய - வாசுதேவ பரபரப்பு தகவல்
Colombo
Gotabaya Rajapaksa
Vasudeva Nanayakkara
SL Protest
By Sumithiran
பதவி விலகுகிறார் கோட்டாபய
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நாளையதினம் பதவி விலகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
அரச தலைவர் பதவி விலகும் தகவல் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசை அமைக்க கலந்துரையாடல்
அரச தலைவரை வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரி நாளையதினம் கொழும்பில் பாரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
