ஜனாதிபதி தேர்தல் : வெளியான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் (Presidential election) போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிடுவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளிாகியுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த கட்டுப்பணத்தை வைப்பிலிட முடியும்.
இந்த அறிவித்தலை இன்று (26) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.
வைப்பிலிட வேண்டிய கட்டுப்பணம்
அதாவது, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 50 ஆயிரம் ரூபாவும், வேறொரு அரசியல் கட்சியினால் அல்லது வாக்காளர் ஒருவரினால் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக வைப்பிலிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |