ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
Sri Lankan Peoples
Election
Sri Lanka Presidential Election 2024
By Aadhithya
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 தபால் திணைக்களப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் (Colombo) இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க (Rajitha K. Ranasinghe) இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைகள்
அதன்படி, இன்று முதல் நடைமுறையாகும் வகையில் அவர்கள் தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்