அதிபர் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்! உறுதியளிக்கும் எம்பி
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
"படுதோல்வியைத் தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பசில் ராஜபக்ச கோருகின்றார். ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் மொட்டுக் கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது." என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிட்டதாவது"மொட்டுக் கட்சிக்கு ஆதரவு உள்ளது, மக்கள் உள்ளனர் என்றெல்லாம் அக்கட்சியினர் மாயையை உருவாக்கி வருகின்றனர்.
அதிபர் தேர்தல்
அதிபர் தேர்தலில் படுதோல்வி ஏற்படும் என்பது பசிலுக்குத் தெரியும். எனவே, அதிபர் தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேலை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள்.
அதனால் மொட்டுத் தரப்பினருக்கு மேலும் பின்னடைவு ஏற்படும். இதனாலேயே நாடாளுமன்றத்தில் சில ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் கோரப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
இரண்டாவது அரச ஊடகம் மற்றும் அரச அதிகாரிகள், காவல்துறையினர் ஊடாக ஏதேனும் ஒத்துழைப்பைப் பெறலாம் என பசில் கருதுகின்றார்.அதிபர் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற மாட்டாது.
அதேவேளை, அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |