பேசுபெருளாகியுள்ள 13 ஆவது திருத்தம்! எச்சரிக்கை விடுத்துள்ள அதிபர் சட்டத்தரணி
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் நடைமுறை பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்குமென அதிபர் சட்டத்தரணியான மனோகர டி சில்வா (Manohara de Silva) எச்சரித்துள்ளார்.
இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தரப்பினர், அதன் விளைவுகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இலங்கையில் (Sri Lanka) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ள பின்னணியில், அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோரும் அதே கருத்தை வெளியிட்டுள்ளனர்.
பாதகமான விளைவுகள்
இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன மாத்திரம் இதுவரை குறித்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடாதுள்ளதாக மனோகர டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தரப்பினர், அதன் பாதகமான விளைவுகள் தொடர்பில் ஆராய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், முன்னாள் அதிபர்கள் நிராகரித்த 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ரணில் விக்ரமசிங்க அதிக அக்கறை செலுத்துவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் நடைமுறைக்கு ஆதரவளித்துள்ளமை அதிர்ச்சியளிப்பதாகவும் மனோகர டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |