தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு....! நம்ப முடியாது: சுரேஷ் காட்டம்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Suresh Premachandran
By Thulsi Jan 09, 2026 09:32 AM GMT
Report

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது கூறுவதை எப்படி நம்புவது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் அந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

விஜயின் ஜனநாயகனுக்கு UA சான்றிதழ் - உயர்நீதிமன்றம் உத்தரவு

விஜயின் ஜனநாயகனுக்கு UA சான்றிதழ் - உயர்நீதிமன்றம் உத்தரவு

உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை.

அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த அரசு இன்று வரை தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை.

தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு....! நம்ப முடியாது: சுரேஷ் காட்டம் | Presidents Silence Tamil Political Solution Suresh

முக்கியமான சில உறுதிமொழிகளாகக் கருதப்படும் காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கம், தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு ஆகிய உறுதிமொழிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

ஜனாதிபதி என்பவர் முப்படைகளின் தளபதி. அவரால் மிக விரைவாகக் காணிகளை விடுவிக்க முடியும். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் எவ்வளவு காணிகளை விடுவித்துள்ளார்?

யாழ்ப்பாணத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா? இல்லை. ஆகவே, அவர்கள் செய்யக்கூடிய விடயங்கள் என்று சொல்லப்படுபவை கூட இன்னும் செய்யப்படவில்லை.

இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட வீட்டுத் திட்டம்!

இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட வீட்டுத் திட்டம்!

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

இவ்வாறான நிலையில், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது கூறுவதை எப்படி நம்புவது?

தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு....! நம்ப முடியாது: சுரேஷ் காட்டம் | Presidents Silence Tamil Political Solution Suresh

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த ஒரு வருட காலத்தில் அவர்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாமல் செய்யப்படும் என்று அவர்கள் கூறினார்கள்.

அப்படியாயின் அந்த இடத்துக்கு என்ன வரப்போகின்றது? என்னத்தைக் கொண்டு அதை மாற்றீடு செய்யப் போகின்றார்கள்? அந்த இடத்தில் வரப்போவது சமஷ்டியா? அல்லது வேறுவிதமான அதிகாரப் பகிர்வா? அதை எவ்வாறு செய்யப்போகின்றார்கள்? அவர்களது கட்சியில் இருக்கக்கூடிய செயலாளர் ரில்வின் சில்வாவோ அல்லது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ கூட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி இதுவரை வாய் திறந்து பேசவில்லை.

இவர்களும் ஏனைய அரசுகளைப் போல் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஆகவே, அவற்றை அவர்கள் மாற்ற வேண்டுமெனில் பல விடயங்களை அவர்கள் செய்ய வேண்டும்." - என்றார்.

யாழில் குப்பைகளை அகற்ற பின்னடிக்கும் பிரதேச சபை - மக்கள் விசனம்

யாழில் குப்பைகளை அகற்ற பின்னடிக்கும் பிரதேச சபை - மக்கள் விசனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021