இனப்படுகொலையை கேள்விக்குட்படுத்தும் செம்மணி : கஜேந்திரகுமார் வெளியிட்ட தகவல்
செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொறுப்புக்கூறல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது உங்களிற்கு தெரியும்.
ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்னரே எங்களிற்கு அறிவித்திருந்தார்கள்.வார ஒரு நோக்கம் இருப்பதாக எங்களிற்கு சொல்லப்பட்டிருந்தது.
அப்படி சொல்லப்பட்ட நிலைமையில் வடகிழக்கை சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன.
செப்டம்பர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முடிவடையும் வரை இங்கே வராதீர்கள் என அவர்கள் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
2021ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி ஒரு பொதுகடிதத்தை தமிழ் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து அனுப்பியிருந்தோம்.பொறுப்புக்கூறல் தொடர்பிலே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் - நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.
அந்த கடிதத்தில் அவ்வேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராயிருந்த சம்பந்தன் அவர்களும் கையெழுத்திட்டிருந்தார்.மனித உரிமை விடயத்தில் உறுதியாக இணைந்து பயணிக்கின்ற அமைப்புகளும் கைச்சாத்திட்ட கடிதம்.
இன்றைக்கும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அந்த கடிதம் ,இன்றும் மிகவும் பொருத்தமான ஒரு கடிதம். உண்மையிலேயே தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயம் 100க்கு நூறு வீதமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடிதமாக அது காணப்படுகின்றது என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
