பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் சிக்கல் நிறைந்ததாக இருப்பதாகவும், சட்டம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டமானது இலங்கையில் அரசியல் அச்சுறுத்தலுக்கு பயன்படுத்தப்படலாம் எனவும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாய்பி சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம்
[TLA15K
பயங்கரவாத தடைச்சட்டமானது நீதித்துறை மீளாய்வு இல்லாததனால் பிரச்சினைக்குரியது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாய்பி குறிப்பிட்டுள்ளார்.
பல அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாக தம்மிடம் கூறியுள்ளதாகவும் அவர் உள்ளூர் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.
குறித்த சட்டத்தை இலங்கையிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் உள்ளிட்ட சிங்கள மக்கள் பலரும் தொடர்ந்து எதிர்த்து வருவதுடன், இதனால் தாம் அதிகளவில் பாதிக்கப்பட்டுவதாக தமிழர் தரப்பும் சுட்டிக்காட்டி வருகின்றது.
இந்த நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் இலங்கை மக்கள் மத்தியில் பரந்த கருத்தொருமைப்பாடு காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கூறியுள்ளார்.
தொடரும் எதிர்ப்பு
கடந்த 2017 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடை சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்ததையும் சாய்பி நினைவு கூர்ந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட இலங்கைக்கு தீர்வு காண வேண்டிய சில பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜிஎஸ்பி பிளஸ் பயனாளிகள் குறித்த அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
