சிறிலங்காவுக்கு இருண்ட யுகம்! புலம்பெயர்ந்தவர்களுக்கு கனவாக மாறப்போகும் தாயகம்
பயங்கரவாத தடைச் சட்டம் சிறிலங்காவை பொறுத்தவரை கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களை மிக மோசமான நெருக்குவாரங்களுக்குள் உட்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் கைக்கொண்ட மிகப் பிரதானமான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இச்சட்டமூலத்தினால் ஆயிரக்கணக்காண அப்பாவித் தமிழ் இளைஞர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
இச்சட்டம் அண்மைக்காலமாக சிங்கள மக்கள் மீதும் பயன்படுத்தப்பட்ட போது இதற்கான வலுவான ஒரு எதிர்ப்பு உருவானது.
இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் பார்வையில் இது மிகமோசமான, மிலேச்சத்தனமான ஒரு சட்டமாக கொள்ளப்பட்டு இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களைத் தொடர்ந்து புதிய சட்ட வரைபொன்றினை தயாரிக்க சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்த நிலையில்,
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
இப்போது தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைப்பு ஏற்கனவே இருந்ததை விட அடிப்படை மனித உரிமைகளைக் கூட பறிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்க்கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் “இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதையாகிப்போன” புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் அதன் மூலமான மோசமான விளைவுகள் பற்றி ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன்,
