மாணவர் செயற்பாட்டாளர்களின் விடுதலை தொடர்பில் சர்வதேசத்திடம் கோரிக்கை!

Sri Lanka SL Protest Sri Lanka Prevention of Terrorism Act
By Kalaimathy Nov 16, 2022 11:27 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர் செயற்பாட்டாளர்களின் தடுப்புக் காலம் முடிந்த பின்னர் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கையிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழுவொன்று சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகும் நவம்பர் 18, 2022அன்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கான ஆதரவை வரவேற்றுள்ள இலங்கை சிவில் சமூக ஆர்வலர்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை அழைத்து, அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர்களை நிபந்தனையின்றி விடுவிக்கவும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு கடிதம்

மாணவர் செயற்பாட்டாளர்களின் விடுதலை தொடர்பில் சர்வதேசத்திடம் கோரிக்கை! | Prevention Terrorism Act Prisoner Government Sl

150 சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் 75 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பத்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் ஊடாக நவம்பர் 15, செவ்வாய்கிழமை அவர்கள் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் அதிபர், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த அண்மைய மக்கள் எழுச்சியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழில் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் பங்களிப்பை நினைவு கூரும் கடிதத்தில், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி பொருட்கள் மற்றும் சேவைகளின் தாங்கிக்கொள்ள முடியாத விலை அதிகரிப்பு, மோசமான நிர்வாகம், ஊழல் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் இப்போது தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கான தயார் நிலை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றதன் பின்னர் உக்கிரமடைந்துள்ள அரச அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மக்கள் கோருகின்றனர்.” எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் நாட்டில் பொது இடங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில், இராஜதந்திர சமூகம், கருத்து சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வமான வழிமுறைகள், மனித உரிமைகள் வழிமுறைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கண்காணிப்பு மற்றும் தலையீட்டையும் கடிதம் பாராட்டியுள்ளது.

மக்கள் சுதந்திரத்தை நசுக்க முடியாது

மாணவர் செயற்பாட்டாளர்களின் விடுதலை தொடர்பில் சர்வதேசத்திடம் கோரிக்கை! | Prevention Terrorism Act Prisoner Government Sl

சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அவரது திட்டம் குறித்து நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

எவ்வாறாயினும், பொதுமக்களின் எதிர்ப்பையும், கருத்துச் சுதந்திரத்தையும், மக்கள் ஒன்றுகூடுவதையும் நசுக்குவதற்கு அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் அங்கீகாரம் வழங்க முடியாது என வெளிநாட்டு தூதரகங்களுக்கான கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியான காலப்பகுதியில் அரசாங்கம் தனது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மீளாய்வு செய்யப்படவுள்ள GSP+ நிவாரணத்தை பாதிக்கும் சாத்தியம் குறித்தும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

"தவறான தகவல், தகவல்களைத் திரிபுபடுத்தல் ஆகியவற்றின் மூலம் குடிமக்களின் போராட்டங்களை குற்றச் செயல் என முத்திரை குத்தி பெரும்பாலும் இல்லாதுபோகும் என எதிர்பார்க்கப்படும் GSP+ நிவாரண இழப்பின் பொறுப்பை போராட்டக்காரர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் மீது சுமத்தும் அரசாங்கத்தின் முயற்சி ஆபத்தானது.

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த அதன் அடக்குமுறைக் கொள்கைகள், தண்டனையின்மை மற்றும் ஊழலை அரசாங்கம் ஒப்புக்கொண்டு விலகிச் செல்ல வேண்டும்."

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்

மாணவர் செயற்பாட்டாளர்களின் விடுதலை தொடர்பில் சர்வதேசத்திடம் கோரிக்கை! | Prevention Terrorism Act Prisoner Government Sl

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களாக தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என மீண்டும் சுட்டிக்காட்டும் சிவில் சமூகம், மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மீறும் நோக்கில் இந்தக் கொடூரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் வலியுறுத்துகிறது.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை அடக்குவதற்கும், அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனக் குரல்களை நசுக்குவதற்கும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை 127 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 11 பேர் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இலங்கையின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கொடிகாமம், Herning, Denmark

26 Mar, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், La Courneuve, France

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, Trondheim, Norway

30 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sumiswald, Switzerland

29 Mar, 2019
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு

25 Mar, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி

22 Mar, 2022
மரண அறிவித்தல்

ஒலுமடு மாங்குளம்

28 Mar, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், மானிப்பாய், கொழும்பு, Toronto, Canada

23 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, Noisiel, France

04 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, Croydon, United Kingdom

29 Mar, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் மேற்கு, Scarborough, Canada

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், செம்பியன்பற்று

29 Mar, 2014
மரண அறிவித்தல்

ஒலுமடு மாங்குளம், யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம், Jaffna, Harrow, United Kingdom

09 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

29 Mar, 2009
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், கொழும்பு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், யாழ்ப்பாணம்

27 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், Mississauga, Canada

09 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கனடா, Canada

27 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Markham, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018