வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Kiruththikan
விலை
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் தற்போது நெருக்கடியான நிலையில் காணப்படும் கோதுமை மா தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தலைமையில் வர்த்தக அமைச்சில் நடைபெற்றுள்ளது.
எனினும் இந்த கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை எனவும், கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே வெதுப்பக பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் கோதுமை மா நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
விலையை குறைக்க முடியாது
கோதுமை மாவின் விலையை குறைக்க முடியாதுள்ளதாக நாட்டிலுள்ள பிரதான கோதுமை மா நிறுவனங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.