ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு - சடுதியாக மற்றுமொரு விலை குறைப்பு..!
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் பல பொருட்களின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.
இதற்கமைய தேயிலை தூள் ஒரு கிலோகிராமின் விலை 200 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை ஒரு கிலோகிராம் இதுவரை 1250 ரூபாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
பாரிய சவால்
எனினும் தற்போது 1050 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுவதாக பெருந்தோட்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தால் எதிர்காலத்தில் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாரிய சவாலை சந்திக்க நேரிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி